தெற்கு காஸாவில் ஹமாஸ் படையினரால் உருவாக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுரங்க வாழ்விடப் பகுதியைக் கண்டுபிடித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அதன் விடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட வீரர் ஹர்தர் கோல்டின் உடல் இந்தச் சுரங்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சுரங்கம், 7 கி.மீ. நீளமும், 25 மீட்டர் ஆழத்திலும் தோண்டப்பட்டுள்ளதும், இதில் தனித்தனியாக 80 அறைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.