பூமிக்கு அடியில் 700 கி.மீ ஆழத்தில், மேற்பரப்பு கடல்களை விட 3 மடங்கு அதிக நீர் தேங்கியிருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். 'ரிங்வுடைட்' எனும் நீல நிற தாது பாறைகள் தங்களுக்குள் ஸ்பாஞ்ச் போல நீரை தேக்கி வைத்துள்ள இந்த அபூர்வ கண்டுபிடிப்பு, பூமியின் நீர்ச் சுழற்சி குறித்த புதிய பார்வையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாறைகள் நீரை தக்கவைத்து வெளியிடும் விதம், ஏதோ பாறைகள் வியர்ப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.