ENG Vs IND இறுதி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகிக்கொண்டார். இறுதி போட்டி குறித்து அவர் பேசுகையில், "4வது டெஸ்ட்க்குப் பின் போதுமான நாட்கள் இல்லை. இதனால் 5வது போட்டி இரண்டு அணிக்கும் சிரமமாக இருக்கும். நான் இல்லாதபட்சத்திலும் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வெற்றி அடையும் என நம்புகிறேன். முந்தைய போட்டியில் அதிக ஓவர்கள் வீசியிருக்கிறோம்" என பேசினார்.