ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?

கிருத்திகை நாளான இன்று (ஜூலை 29) சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது முருகப் பெருமானின் ஆலயத்திலோ முருகனை வழிபட்டு பின்னர் விரதத்தை தொடங்கவேண்டும். இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் பால் அல்லது பழங்கள் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். விரத காலத்தில் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், பக்தி பாடல்கள் பாடி முருகனை ஆராதிக்கலாம். மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்துவிட்டு சைவ உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி