உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பெயரை இரண்டு முறை மாற்றலாம். பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். உங்கள் முகவரியை புதுப்பிப்பதற்கு வரம்பு எதுவும் இல்லை. உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று பயோமெட்ரிக் டேட்டா அங்கீகாரத்தோடு அப்டேட் செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க, ட்ராக்கிங் நம்பருடன் கூடிய ரசீது உங்களிடம் வழங்கப்படும். இந்த சேவைக்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.