மெக்காவை குறிவைக்கவில்லை: ஹவுதி மறுப்பு

ஹவுதி அமைப்பினர், மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். சவுதி ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்லாமிய புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் சவுதியின் எண்ணெய் தளங்கள் மீது நடந்த தாக்குதலில் 73 பேர் காயமடைந்தனர். ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் விங் லூங் 2 என்ற ஆயுதம் ஏந்திய டிரோனை தாக்கி அழித்ததாக இன்று கூறினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕