வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளம் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், சிற்றுண்டிச்சாலைகள் இன்று (மே 6) மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் உணவு டெலிவரியும் நிறுத்தப்பட்டுள்ளது. வர்த்தக சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கவும், தேவைக்கேற்ப எரிபொருள் வழங்கவும் கோரி கேரளம் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது. ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருசில ஹோட்டல்கள் பாதியாக திறக்கப்பட்டுள்ளன.