நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க MLA முஸ்தபாவிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதிமுக நிர்வாகியும், Ex மேயருமான பி.எம்.மன்னனிடம் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டது. இப்புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்ற அவர், மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பாக இன்று ஆஜரானார். ரூ.15 முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இந்த தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நன்றி:பாலிமர்