குதிரை பேரம்: தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை - திமுக தரப்பு

குதிரைப் பேரம் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் முன்வைத்தார். குதிரைப் பேர குற்றச்சாட்டு வழக்கில் ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அப்போது, அரசை கவிழ்க்க சதி நடைபெற்றதாக யூகத்தின் அடிப்படையில் புகார் கூறப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாஜிக்கும், அவரது தம்பி அசோக்குக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி