ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து தற்காத்து கொள்ளும் நோக்கில் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று (ஜூலை 8) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் செந்தில் பாலாஜி மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.