கோர விபத்து.. தலைநசுங்கி பள்ளி ஆசிரியை பலி

ஈரோடு மாவட்டத்தில், தனியார் மழலையர் பள்ளி ஆசிரியை, தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஆசிரியை வழக்கம்போல் இன்று (ஜூலை 31) தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி ஆசிரியை கீழே விழுந்த நிலையில், தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி