திருவிழாவில் கோர விபத்து: ஊஞ்சல் அறுந்து விழுந்து காவலர் பலி

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் சுராஜ்குண்ட் மேளாவில், 'சுனாமி ஸ்விங்' எனப்படும் ராட்சத ஊஞ்சல் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 18 பேருடன் மேலே சென்ற ஊஞ்சல் தொழில்நுட்ப கோளாறால் சிக்கிய நிலையில், மீட்பு பணியின் போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவிழா கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி