திருநெல்வேலியில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தை, குற்றவாளியின் தாயை கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “எனது மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் குற்றவாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சிறப்புக் காவல் படை SI சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.