திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை வழக்கில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் அவர் கட்டபஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது. மேலும், காதலை கைவிடும் படியும், இல்லையெனில் கை, கால்களை உடைத்து விடுவதாக கவினை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முக்கியமாக, கவின் நெல்லை வரும் தகவலை, சுர்ஜித்திற்கு காசிபாண்டியன் தான் சொன்னதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7