இந்தியாவில் வெளியாகும் ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ZR-V எஸ்யூவி மாடலை இந்தியாவிற்குக் கொண்டு வர ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் உட்பட பல தெற்காசிய நாடுகளில் இந்த மாடலை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. டொயோட்டா கொரோல்லா கிராஸ் மாடலுக்குப் போட்டியாக இது உள்ளது.

தொடர்புடைய செய்தி