கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.