வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (அக்.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕