திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று (நவ., 06) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், சேலம், வேலூர், விருதுநகர், விழுப்புரம், சேலம், நெல்லை, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.