கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை (டிச.3) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இதன் காரணமாக ஒருசில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.