மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை முழுப் பணி நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.