“பள்ளிக்குத் தேவையான முட்டைகள் பதுக்கல்’.. அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகள் பதுக்கப்படுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி