HMPV வைரஸ் குறித்து தமிழ்நாட்டு மக்கள் எந்தவிதமான பதற்றமும் அடைய வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். "வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எந்தவொரு எச்சரிக்கையும் இன்னும் விடுக்கவில்லை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பிரத்யேக சிகிச்சை எதுவும் தேவையில்லை. அதே நேரம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது நல்லது" என கூறியுள்ளார்.