ஊட்டியின் நுழைவாயிலான குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் பாளையம், 'ஜெகதளா' என்ற பழம்பெரும் பெயரிலிருந்து 'ஸ்ரீநாகேஷ் பேரக்ஸ்' என பரிணமித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. 1852ல் சர் ரிச்சர்ட் ஆம்ஸ்ட்ராங் ஐரன் டியூக்கின் நினைவாக இப்பகுதிக்கு வெலிங்டன் எனப் பெயரிட்டார். 1852ல் தொடங்கி 1860ல் முடிந்த போர் வீரர் குடியிருப்புகள் 'வெலிங்டன் பேரக்ஸ்' என அழைக்கப்பட்டன. 1947 முதல் மெட்ராஸ் ரெஜிமண்டல் சென்டர் என அறியப்பட்ட இப்பகுதி, தற்போது ஜெனரல் ஸ்ரீநாகேஷின் நினைவாக 'ஸ்ரீநாகேஷ் பேரக்ஸ்' என அழைக்கப்படுகிறது.