பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அம்மாநில மக்கள் சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களோடும், செயல்பாடுகளோடும் இயங்கி வரும் கூட்டணியை புறக்கணித்துவிட்டனர். வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.