பிரபால ஹிப்-ஹாப் பாடகர் ராப் பேஸ் (59) நேற்று (மே 22) காலமானார். புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ராபர்ட் கின்யார்ட் என்ற இயற்பெயர் கொண்ட ராப் பேஸ், தனது சக கலைஞர் டிஜே ஈ-இசட் ராக் உடன் இணைந்து 1988-ல் வெளியான 'இட் டேக்ஸ் டூ' என்ற வெற்றிப் பாடலின் மூலம் புகழ்பெற்றார். இந்த இரட்டையர் 1986-ல் 'டிஜே இன்டர்வியூ' என்ற பாடலுடன் இசையுலகில் அறிமுகமானார்கள். டிஜே ஈ-இசட் ராக், நீரிழிவு நோய் காரணமாக 2014-ல் காலமானார். அப்போது அவருக்கு வயது 56.