ராப் பாடகராக அறிமுகமாகி, இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'ஆரா 10/10' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடலை ஆதியே எழுதிப் பாடியுள்ளார். படத்தின் பிற பாடல்களும் கவனிக்கப்பட்டு வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'மீசைய முறுக்கு' திரைப்படம் 2017 இல் வெளியாகி இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.