கர்நாடகா: தேவனஹள்ளியை சேர்ந்த 24 வயது இளம்பெண் மோகன்குமார் என்பவரை 5 வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அதை, மோகன் வீடியோ எடுத்து, தனது காதலியை மிரட்டியுள்ளார். அந்த இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து மோகன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். மோகன் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்ததையடுத்து அவரை கைது செய்து விசாரதித்ததில் இதுவரை ரூ.2.57 கோடியை மோகன் பறித்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.