அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய விபத்து குறித்த தகவல்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று (ஜூன் 14) வெளியிட்டார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விசாரணை நடத்த 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று மாலை 5 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நன்றி: ANI