கோவையில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பெண் ஒருவர் சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தியதில், அவரிடம் இருந்து 3 கிலோ அளவிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பெண் கைது செய்யப்பட்டார்.