சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கின் தற்போதைய நிலை மற்றும் விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.