சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதியை விடுவிக்க வேண்டும் - நீதிமன்றம்

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடியை உடனடியாக ஒதுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், கனிம நிதியை பயன்படுத்துவதில் தாமதம் கூடாது என்றும், 2 வாரங்களுக்குள் நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕