சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் உத்தரவு

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானின் பெரியார் குறித்த கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. எனவே மனுதாரரின் புகார் மனுவை ஏற்று மதுரை அண்ணா நகர் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி