தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தலைமறைவாக மாட்டார் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் அவரது தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தினமும் காலை, மாலை, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இருவரும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.