சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையில் நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. கார்கள், பஸ்களில் மக்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். அதே போல், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்து வருகின்றனர்.