சிக்கிமின் சோம்கோ ஏரி அருகே கடும் பனிப்பொழிவால் 541 வாகனங்களில் சிக்கிய 2,700 சுற்றுலா பயணிகள், மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுற்றுலாத்துறை மற்றும் BRO பணியாளர்கள் ஒருங்கிணைந்து இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்டனர். வானிலை அபாயங்களை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.