தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.4) நள்ளிரவு 1 மணி வரை 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருச்சி, திருநெல்வேலி, கரூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.