தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இன்று (நவ.24) திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: PT