சென்னையில் வெளுக்கும் கனமழை.. அன்புமணி கோரிக்கை

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல சென்னையில் மழை கொட்டித் தீர்த்துள்ளதால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு, அதன் பரிந்துரைப்படி வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕