கேரளாவில் கனமழை: 2 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பத்தனம்திட்டா மற்றும் கண்ணூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (ஆக.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான அசம்பாவிதங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமான 6 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕