5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை அலர்ட்

கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (மே 20) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி