கனமழை.. 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 20 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கில் செலவு செய்து நடவு செய்த பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி