காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை (நவ.18) கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்நிலையில், மழையின் தீவிரத்தை பொறுத்து நாளை விடுமுறை விடலாமா அல்லது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுமா என்பது குறித்து நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.