குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் நாளை (நவ.25) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யு உள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் எனத் தெரிகிறது.