தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே.24) மற்றும் நாளை (மே.25) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.