தமிழகத்தில் தொடர்ந்து ஒருசில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று (மே.29) கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை (மே.30) திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யவுள்ளது.