வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவ.9) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நவ.14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி:News18