தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று (ஜூன் 14) ஏழு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் கனமழை பெய்யவுள்ளது. மேலும், தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி