தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் மே மாதம் 16-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.