தமிழ்நாட்டில் இன்று (ஜன.11) தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்