இரவு 10 மணிவரை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கோடைகாலம் தொடங்கியது முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், கரூர், சேலம், ராமநாதபுரம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மக்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி